3 பிள்ளைகளை தவிக்க விட்டு தாயார் மாயம்; உறவினர்கள் முறைப்பாடு
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாய் கடந்த திங்கட்கிழமை(10) முதல் காணாமல் சென்றுள்ளதாக உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
7 நாட்கள் சென்றும் வீடு திரும்பவில்லை
காணாமல் சென்ற பெண்ணை மூதூர் பகுதியை சேர்ந்த நபரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்றைய தினம் குறித்த நபரால் அழைத்துச் செல்லப்பட்ட 3 பிள்ளைகளின் தாயாரான பெண் இன்னும் வீடு வரவில்லை என்பதடன் இப்பெண் தொடர்பில் ஏதாவது அறிந்திருந்தால் தெரியப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது .
03 பிள்ளைகளின் தாய் 7 நாட்கள் சென்றும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்ணை அழைத்து சென்ற நபர் கல்முனை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஐஸ் கிரீம் வியாபாரம் செய்பவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளதாக கூறப்படுகின்றது.