தமிழர் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்து ; வீதியை கடக்க முற்பட்ட பெண் ஸ்தலத்தில் உயிரிழப்பு
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புளியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
அதிவேகத்தில் வேகட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணை மோதி தள்ளியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தின்போது விசுவமடு புளியடி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 53 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.