உறங்கிக் கொண்டிருந்தவர் கோடாரியால் தாக்கப்பட்டு உயிரிழப்பு
கம்பஹா - மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் கோடாரியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை (25) அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் உயிரிழந்தவர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இருவருக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக, சந்தேகநபர் தனது வீட்டிலேயே மற்றுமொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தவரை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.