வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அனுர அழைப்பு!
இலங்கையில் வேர் வரை ஊழல் ஒழிக்கப்படும் அதற்காக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் திங்கட்கிழமை வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மதம், இனம், பாலினம் என பிரிவடையும் காரணிகள் இல்லை
அரசாங்கம் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை நாணயம் சில்லறைகள் மற்றும் தாள்கள் இல்லாத சகாப்தத்தை நோக்கி நகர்கிறது.
ஊழலை தவிர்க்க இது ஒரு நல்ல முடிவு. தேவையில்லாமல் சொத்துக்களை குவிப்பவர்கள் இந்த முடிவுகளால் பாதிக்கப்படுவார்கள்.
இலஞ்சம் வாங்குபவர்கள் அனைவரும் பயப்படும் சமூகத்தை உருவாக்குவோம். தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பொலிஸாருக்கே அதிகளவு தண்டனைகளை வழங்கியுள்ளார்.
வேர் வரை ஊழல் ஒழிக்கப்படும் இந்ந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம் என்றார்.
அதோடு இந்த நாட்டில் இன முரண்பாடுகள் இனி இல்லை. மதம், இனம், பாலினம் என பிரிவடையும் காரணிகள் இல்லை நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி அனுர கூறினார்.