யாழில் இளம் பெண் அரச ஊழியர் பரிதாப உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தமிழினி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த அண்மையில் தீயில் எரிந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (16) உயிரிழந்துள்ளார்.
நுளம்புத்திரி படுக்கையில் பட்டு தீ
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஆறு மாத கர்ப்பிணியான சதீஸ் தமிழினி (வயது 33) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை படுக்கையறையில் இருந் நுளம்புத்திரி தவறுதலாக படுக்கையில் பட்டு தீப்பற்றியமையால் , தீக்காயங்களுக்கு உள்ளானார் என சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதேவேளை இவரை காப்பாற்ற முற்பட்ட நிலையில், கணவரும் சிறு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தார்.
அதேவேளைப் உயிரிழந்த உதவி பிரதேச செயலாளர் தமிழினி நேர்மையாக துடிப்புடன் மிகச் சிறந்த சேவைகளை சாவகச்சேரி பகுதி மக்களுக்கு வழங்கி வந்தவர் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.