தமிழர் பகுதியில் பண மோசடி ; நம்பிக்கையை துரோகம் செய்த இளைஞன்
கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தை சேர்ந்த பெண் தனது வீட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதனையடுத்து மின் கட்டணம் செலுத்த மக்கள் வங்கிக்கு சென்று பணத்தை வைப்பிலிடுவதற்கு இளைஞன் ஒருவனின் உதவியை நாடிய போது குறித்த இளைஞன் அப்பெண்ணின் 6500 ருபா பணத்தை தனது வங்கி கணக்கு வைப்புச் செய்துவிட்டு குப்பைத்தொட்டியில் இருந்து சிட்டை ஒன்றை எடுத்து அப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு சென்று சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் பின்னர் அப்பெண் வங்கி சென்றிருகின்றார் அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துவிட்டு வந்தால்மாத்திரமே உதவ முடியும் என கூற அவர் பொலிஸ் நிலையம் சென்றிருக்கின்றார்.
அவர்கள் ஆறாயிரம் ரூபா எல்லாம் ஒரு கேஸா என வின முறைப்பாடு செய்ய சென்றவர் எதுவும் ஆகாது என திரும்பிவிட்டார். இதன் பின்னர் விடயத்தை அவரது சகோதரி எனது கவனத்திற்கு கொண்டு வந்தார்.
நான் மக்கள் வங்கியின் உதவி பிராந்திய முகாமையாளர் நண்பன் பிரதீப்பின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். பிரதீப் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி பணத்தை மோசடி செய்தவரை கண்டு பிடித்தார்.
அதன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு இன்று (03) குறித்த இளைஞன் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பணம் மீளப்பெறப்பட்டு உரிய பெண்ணிடம் வழங்கப்பட்டது.
அத்தோடு முறைப்பாட்டை விசாரித்த பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த பெண்ணின் நிலை அறிந்து அவரது போக்குவரத்துக்கு அவர் தனது பணத்திலிருந்து ஆயிரம் ரூபா வழங்கியதோடு தேனீர் பெற்றுக்கொடுத்து ஆறுதல் வார்த்தைகள் கூறி அனுப்பியிருக்கின்றார்.
குறித்த இளைஞனை பாதிக்கப்பட்ட தரப்பினர் மன்னித்துவிட்டுவிட்டனர் அந்த இளைஞன் தனியார் வங்கி ஒன்றின் நிதி நிறுவனத்தில் பணியாற்றுகின்றவர்.
உடனடியாக நடவடிக்கை எடுத்த மக்கள் வங்கியின் உதவி பிராந்திய முகாமையாளர் பிரதீப் அவர்களுக்கும் கிளிநொச்சி மக்கள் வங்கிக்கும் மிக்க நன்றிகள். பொலிஸ் மக்களின் நண்பன் என்ற வகையில் இரண்டாம் நடந்து கொண்ட கிளிநொச்சி பொலிஸாருக்கும் நன்றிகள்