இலங்கையில் அதிகரிக்கும் வட்ஸ் அப் மோசடிகள்
நாட்டில் வட்ஸ் அப் மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
மலிவு விலையில் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்வதாகக் கூறி செய்திகளைப் பெறும் குழுக்கள் மூலம் இந்த மோசடி செய்யப்படுவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு
கலந்துரையாடலுக்காக சூம் இணைப்பு வழியாக குறியீட்டைப் பெறுவது எனும் போர்வையில் வட்ஸ் அப் கணக்குகளுக்கு ஊடுருவல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் குழுவிலுள்ள ஏனையவர்களுக்கும் செய்திகள் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுவதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ஒருவரின் வட்ஸ் அப் கணக்கு ஊடுருவப்பட்டால், அவர்கள் வணிகம் செய்யும் வங்கியைத் தொடர்புகொண்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மோசடி தொடர்பிலான தொலைபேசி எண்கள் அல்லது பரிவர்த்தனைகளின் நகல்கள் இருப்பின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்க வேண்டுமெனவும் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.