விஷத்தன்மை கொண்ட நண்டை உண்டதால் பலியான பிரபலம்
சமூக வலைத்தளங்களில் உணவு தொடர்பான காணொளிகளைப் பதிவிடும் 51 வயதான பிலிப்பைன்ஸ் பெண்மணி ஒருவர், விஷத்தன்மை கொண்ட நண்டை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 4 ஆம் திகதி, எம்மா அமித் (Emma Amit) என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து சதுப்புநிலக் காட்டில் கடல் உணவுகளைச் சேகரித்துள்ளார்.

பறிபோன உயிர்
தான் பிடித்த நண்டுகளைத் தேங்காய்ப் பாலில் சமைத்து உண்பதை அவர் தனது சமூக வலைத்தளங்களுக்காக படம் பிடித்துள்ளார். இந்நிலையில் உணவு உட்கொண்ட அடுத்த நாள், நண்டிலுள்ள நச்சுத்தன்மை காரணமாக அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவரது வீட்டுக் குப்பையில் பிரகாசமான நிறம் கொண்ட நண்டுகளின் ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
பெண்ணின் உயிரிழப்பை தொடர்ந்து, அந்த பகுதியில் வசிக்கும் மக்களை இத்தகைய நண்டுகளை உண்ண வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.