இங்கு குடியேறினால் பணமும் வீடும் இலவசம்; அழைப்பு விடுக்கும் ஐரோப்பிய நாடு!
இத்தாலியின் ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் பணம் வழங்க இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது .
இந்த நகரத்தின் 33 கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் இந்திய மதிப்பில் 92 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்க முடிவு செய்துள்ளது.
ஆனால் நிபந்தனைகள் உண்டு
அதேவேளை வெளிநாட்டவரும் இந்த வாய்ப்பை பெறலாம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் அரசாங்கம் கொடுக்கும் வீட்டில் 10 ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும் இல்லையெனில் கொடுத்த பணத்தை திரும்ப அரசாங்கத்திற்கே வழங்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இத்தாலியின் ட்ரெண்டினோ கிராமத்தை விட்டு மக்கள் வெளியேறி நகர் புறங்களில் தற்போது குடியேறி வருவதால் இம்முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.