நள்ளிரவில் ஆன்லைன் டெலிவரி; சுடுகாட்டிற்கு வரச் சொன்ன பெண்ணால் நடுநடுங்கிய ஊழியர்!
ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்குப் பல விசித்திரமான அனுபவங்கள் ஏற்படுவதுண்டு. இந்நிலையில் சமீபத்தில் வைரலான இந்த வீடியோ பலரையும் அதிர வைத்துள்ளது.
ஒரு பெண் உணவு ஆர்டர் செய்துவிட்டு, அதை டெலிவரி செய்ய ஒரு சுடுகாட்டிற்குள் வருமாறு அந்த ஊழியரை அழைத்துள்ளார்.

கெஞ்சிய டெலிவரி ஊழியர்
அந்த ஊழியர் பயந்துபோய் உணவை நுழைவு வாயிலிலேயே பெற்றுக் கொள்ளுமாறு கெஞ்சியபோதும், அந்தப் பெண் உள்ளே வந்துதான் கொடுக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்துள்ளார்.
இதனால் மிகுந்த சங்கடத்திற்குள்ளான அந்த ஊழியர், இறுதியில் அந்த ஆர்டரை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகின்றது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பலரும் அந்தப் பெண்ணின் செயலை விமர்சித்து வருகின்றனர்.
அதேவேளை ஆன்லைன் உணவு டெலிவரி செய்த அந்தப் பெண் தனது நண்பர்களுடன் சுடுகாட்டில் பார்ட்டி செய்து கொண்டிருப்பதாக போனில் பேசியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.