பல யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தொழிலதிபர் ; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்
18 வயதுக்குட்பட்ட பல பதின்ம வயது பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த நபர் கண்டி, பேராதனிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
கண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் சந்தேக நபர் 18 வயதுக்குட்பட்ட 36க்கும் மேற்பட்ட குழந்தைகளை தவறான நடத்தைக்கு உட்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளதாகவும் குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள சந்தேக நபருக்கு எதிராக 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 38 வயதான சந்தேக நபர் தற்போது பொலிஸாரின் பிடியில் இருப்பதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படும் என்று பொலிஸார் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.