உக்ரைனில் நேரடி ஒளிபரப்பில் பத்திரிகையாளரின் தலைக்கு மேலால் சென்ற ஏவுகணை! வெளியான பகீர் காணொளி
உக்ரைனில் நிலவும் பதற்ற நிலை குறித்து நேரடி ஒளிபரப்பை பகிர்ந்து கொள்ளும் போது ஒரு சூப்பர்சோனிக் ஏவுகணை அவரது தலைக்கு மேல் பறந்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய பத்திரிகையாளரான பிரையன் வில்சன் உக்ரைனின் கீவ் பகுதியில் இருந்து உக்ரைனில் நிலவும் சூழ்நிலை குறித்து தனது நேரடி ஒளிபரப்பை டுவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் போது ஒரு ஏவுகணை அவரது தலைக்கு மேல் பறந்து சென்றது.
வில்சன் உக்ரைனின் தலைநகரில் காணப்படும குழப்பநிலையை பதிவுசெய்ய ஆரம்பித்தவேளை அவரின் தலைக்கு மேலாக ஏவுகணையையொன்று சென்றுள்ளது. அவரின் தலைக்கு மேலாக ஏவுகணை தொலைவில் உள்ள கட்டிடத்தை நோக்கி செல்வதை காணமுடிகின்றது.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் அவுஸ்திரேலிய ஊடகவியலாளரையும் அவரது குழுவினரையும் பாதுகாப்பாகயிருக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Missile flying over Aussie reporter while streaming in Ukraine. pic.twitter.com/YUNBHsH57d
— Poised Tactical (@PoisedTactical) February 24, 2022
இந்நிலையில் மிகவும்பயங்கரமான அனுபவமாகயிருக்கவேண்டும் அவரும் அவரது குழுவினரும் பாதுகாப்பாகயிருக்கவேண்டும் என பிரார்த்தனை செய்கின்றேன் என பெண்ணொருவர் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து பிரையன் வில்சன் பதிவிட்டுள்ளதாவது, இந்த பகுதியில் தொடர்ந்தும் எறிகணை தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. நான் என்னையும் எனது சகாக்களையும்பாதுகாப்பாக பார்த்துக்கொள்கின்றேன்.
நிலைமை மாற்றமடைந்துகொண்டிருக்கின்றது ஆபத்தானதாக காணப்படுகின்றதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மக்கள் யுத்தம் இடம்பெறாதது போல செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இங்கு நடப்பதை என்னால் நம்பமுடியவில்லை எனவும் வில்சன் பதிவு செய்துள்ளார்.