நாட்டை விட்டு புறப்பட்டார் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சற்று முன்னர் நாட்டை விட்டு புறப்பட்டுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையும் சந்தித்து கலந்துரையாடியதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட கடிதத்தையும் அவர் ஜனாதிபதியிடம் கையளித்தார்.]

இதன்போது இலங்கையின் புனரமைப்புப் பணிகளுக்காக இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான விசேட நிதியுதவிப் பொதியை வழங்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அறிவித்தார்.
இதனையடுத்து அவர், பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று பிற்பகல் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின்போது இரு நாட்டு உறவுகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.