மருத்துவப் பரிசோதனை கட்டணப் பட்டியல் போலியானது ; நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை
பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை முக்கிய தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது.
காதலருடன் 2 மாதம் உல்லாசம் ; வீட்டுக்கு திரும்பி வந்து கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த மனைவி
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் குறித்த அறிவித்தல் அதிகாரப்பூர்வமானது அல்ல எனத் தெரிவித்துள்ள அதிகாரசபை, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கட்டணங்களும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் என பொதுமக்கள் கருத வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவலின்படி, குறிப்பிட்ட சில மருத்துவப் பரிசோதனைகளுக்கே வர்த்தமானி அறிவித்தல் மூலம் அதிகபட்சக் கட்டணங்கள் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதன்படி,
முழுமையான இரத்தப் பரிசோதனை (FBC) – ரூ.400
டெங்கு NS1 என்டிஜென் பரிசோதனை – ரூ.1,200
கொவிட்-19 PCR பரிசோதனை – ரூ.6,500
கொவிட்-19 விரைவு என்டிஜென் (RAT) பரிசோதனை – ரூ.2,000
மேற்கண்ட கட்டணங்கள் பரிசோதனை மற்றும் அறிக்கை ஆகியவற்றுக்கான அதிகபட்சக் கட்டணங்களாகும்.
இதற்கு மேலதிகமாக, சமூக ஊடகங்களில் பரவி வரும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள FBS, RBS, HbA1C, Lipid Profile, LFT, RFT, UFR, CRP, CT, MRI, Ultrasound, Mammogram மற்றும் DEXA உள்ளிட்ட பரிசோதனைகளுக்கான கட்டணங்கள், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உத்தரவுகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் அல்ல எனவும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
எனவே, சமூக ஊடகங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பாமல், மருத்துவப் பரிசோதனை கட்டணங்கள் தொடர்பில் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக தெளிவுபடுத்தல்களைப் பெற 1977 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.