யாழில் இறைச்சி வாங்கியவருக்கு அதிர்ச்சி ; புழுக்களுடன் கோழி இறைச்சி விற்பனை
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள கோழி இறைச்சிக் கடையொன்றில் வாங்கப்பட்ட இறைச்சியில் புழுக்கள் இருந்ததாக நுகர்வோர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாங்கிய இறைச்சியைப் பார்த்தபோது அதில் புழுக்கள் இருப்பது தெரியவந்ததாகவும், பழைய இறைச்சியுடன் புதிய இறைச்சி கலக்கப்பட்டதன் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஊடாக இறைச்சிக் கடை உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் பெறப்பட்டு அவருடன் பேசியதாகவும் பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.