மனைவியின் அக்குளை மோப்பம் பிடிக்கும் பாலிவுட் நடிகர்! சமூகவலைத்தளத்தில் வைரல்
பாலிவுட்டில் பிரபலமான தம்பதிகளில் ஒருவராக வலம் வருபவர்கள் கௌஹர் கான் - சைத் தர்பார்.
இந்த நிலையில், இருவரும் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தங்களது திருமண வாழ்க்கை குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அவளிடம் இருந்து எவ்வளவு நல்ல வாசனை வருகிறது
இதன்போது கணவரின் சில வித்தியாசமான பழக்கங்களை கௌஹர் கான் வெளிப்படையாக கூறியது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது கணவருக்கு இருக்கும் வித்தியாசமான பழக்கம் குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். சைத் தர்பாருக்கு தனது அக்குள்களின் வாசனையை மோப்பம் பிடிப்பது பிடிக்கும் என கௌஹர் கூறியுள்ளார்.
"சைத்திற்கு எனது அக்குள்கள் எப்போதுமே நல்ல வாசனையுடன் இருப்பதாகத் தோன்றும். அவர் அடிக்கடி அதைத் தொட்டு மோப்பம் பிடிப்பார். அதன்பிறகு தனது சகோதரியிடம் சென்று, 'பார், அவளிடம் இருந்து எவ்வளவு நல்ல வாசனை வருகிறது' என்று சொல்வார் என கௌஹர் தெரிவித்துள்ளார்.
கௌஹர் கான் மற்றும் சைத் தர்பார் இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். திருமணத்திற்குப் பிறகு தங்களது குடும்ப வாழ்க்கையின் பல முக்கியமான தருணங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் இந்த ஜோடி, தற்போது தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் இத்தகைய சுவாரஸ்யமான விஷயங்களையும் வெளிப்படையாகப் பேசியிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.