திருமணத்திற்காக பொருத்தம் பார்க்கும் போது இவ் 5 பொருத்தங்களும் கண்டிப்பாக இருக்க வேண்டுமாம்
திருமண வயதில் இருப்பவர்களுக்கு பொருத்தம் பார்க்கப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
அந்த வகையில் ஜோதிட சாஸ்திரங்களில் 36 பொருத்தங்கள் இருக்கிறது என கூறப்படுகிறது. முக்கிய இருமனம் பொருத்தமாக 10 பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது.
இதில் 5 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம் என கூறப்படுகிறது.
தினப் பொருத்தம்
இப் பொருத்தம் தினம் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சந்தோஷமாக இருப்பதற்காக பார்க்ப்படுகிறது.
இப் பொருத்தம் இல்லை என்றால் அவர்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு போராட்டம், பிரச்சனை என்பன இருந்து கொண்டே இருக்கும் என கூறப்படுகிறது.
கணப் பொருத்தம்
இது குணாதிசயங்களை குறிக்கும் பொருத்தம் என கூறப்படுகிறது.
இப் பொருத்தம் இருவருடைய குணங்களுமே ஒன்றி வர வேண்டும் என கூறப்படுகிறது.
இப் பொருத்தம் இல்லை என்றால் இருவருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்.
அதனால் இப் பொருத்தம் திருமண பொருத்தத்தில் கண்டிப்பாக பார்க்கப்படுகிறது.
யோனி பொருத்தம்
இது கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள தாம்பத்திய உறவில் மகிழ்ச்சியாக இருக்க கூடிய பொருத்தம் என கூறப்படுகிறது.
இப் பொருத்தம் இல்லை என்றால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க கூடாது என கூறப்படுகிறது.
ராசி பொருத்தம்
இப் பொருத்தம் ஒரு தம்பதியினரை சேர்த்து வைத்தால் அக் குடும்பம் விருத்தி அடையுமா என்பதை பார்ப்பதற்கு என கூறப்படுகிறது.
திருமணம் முடிந்து ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு செல்லும் போது அப் பெண்ணால் ஏதாவது நல்ல விடயம் இடம் பெறுகிறதா என்பதை பார்ப்பதற்காக என கூறப்படுகிறது.
ரஜ்ஜு பொருத்தம்
10 இல் 9 பொருத்தம் இருந்து இப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்து வைக்க கூடாது என கூறப்படுகிறது.
திருமண பொருத்தத்தில் ரஜ்ஜு பொருத்தமும் யோனி பொருத்தமும் இல்லை என்றல் திருமணம் செய்து வைக்க கூடாது என கூறப்படுகிறது.
மேலும் இவ் இரு பொருத்தங்களும் இல்லாமல் திருமணம் செய்து வைத்தால் அவரக்ளின் திருமண உறவில் பல சங்கடங்கள் நேரும் என கூறப்படுகிறது.