கொத்து பராட்டாவினால் துடிதுடித்து பலியான இளம் குடும்பஸ்தர் ; கதறி அழும் கர்ப்பிணி மனைவி
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 28). இவர், தேவதானப்பட்டி மெயின் ரோட்டில் பழக்கடை வைத்திருந்தார்.இவருக்கு திருமணமாகி பாண்டிதேவி என்ற மனைவியும், 5 வயதில் மகளும் உள்ளனர். மேலும் தற்போது பாண்டிதேவி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
சந்தனகுமார், தனது கடையின் அருகில் உள்ள ஓட்டலுக்கு தோசை வாங்க சென்றிருந்த போது அந்த ஓட்டலில், சமையல் தொழிலாளி சிவா தோசை கல்லில் கொத்து பரோட்டா போட்டு கொண்டிருந்தார்.
ஏன் சத்தமாக கொத்து பரோட்டா போடுகிறாய்..
பரோட்டாவை கொத்து, கொத்தாக மாற்றுவதற்காக கல்லில் கூர்மையான தட்டுகளால் சிவா தட்டிக்கொண்டிருந்தார். இதனால் அதிக சத்தம் எழுந்தது. அங்கு நின்றிருந்த சந்தனகுமார், ‘ஏன் அதிக சத்தத்துடன் கொத்து பரோட்டா போடுகிறாய்’ என்று சிவாவிடம் கேட்டுள்ளார்.
இதனால் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சந்தனகுமார் ஓட்டலில் கிடந்த விறகு கட்டையை எடுத்து சிவாவின் தலையில் தாக்கியதுடன், வலியால் துடித்த சிவா, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தனகுமாரை சரமாரியாக குத்தியுள்ளார்.
நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், சந்தனகுமாரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சந்தனகுமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதேபோல் விறகு கட்டையால் தாக்கியதில் காயமடைந்த சிவா, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.