ரணிலுக்கு ஆதரவாக ராஜபக்ச குடும்பத்தினர் பலர்? குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல்
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்துள்ள தீர்மானம் காரணமாக ராஜபக்ஷ குடும்பத்திற்குள் கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தவர்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தவர்கள் பலர் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவும், இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்சவும் ரணிலுக்கு ஆதரவளிப்பதுடன், அவருக்கே கட்சி ஆதரவளிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஹிந்தவின் ஏனைய புதல்வர்களும் இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
யோசித ரோகிதவின் சந்தைப்படுத்தல் நிறுவனத்தை சேர்ந்த குழுவிடம் ரணிலின் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் நாமல் ராஜபக்ச கட்சி தனது சொந்த வேட்பாளரை களமிறக்கவேண்டும் என்பதில் உறுதியாக காணப்படுகின்றார்.