அனுராதபுரம் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்
அனுராதபுரம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்பணி. நிஷாந்த சாகர ஜெயமான்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயராக அருட்தந்தை நிஷாந்த சாகர ஜெயமான்ன அடிகளார் அவர்கள் திருத்தந்தை லியோ அவர்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய ஆயர்
இவர் 13.05.2000 இல் குருத்துவ அருட்பொழிவு பெற்று நற்கருணை நாதர் சபையில் நிதியாளர் மற்றும் பல உயர் பதவிகளையும் வகித்தவர்.
அது மட்டுமன்றி மாத்தளை ஹன்வெல்ல பகுதிகளில் உதவி பங்குத்தந்தையாகவும் கண்டி தேசிய குருமடத்தில் பேராசிரியராகவும் பின்னர் ஹன்வெல்ல பகுதியில் உள்ள தியான இல்லத்தின் இயக்குனராகவும் பணியாற்றியவர் பின்னர்.
நற்கருணை நாதர் சபையின் முதல்வர் பதவியினையும் வகித்தவர் தற்பொழுது ஆயராக திருத்தந்தையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய ஆயர் அவர்கள் ஓய்வு பெற்ற நிலையில் புதிய ஆயர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.