யாழில் மாட்டிறைச்சியுடன் சென்றவர் கைது
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதங்கேணி பொலிஸாரால் மருதங்கேணி பொதுச் சந்தை முன்பாக இன்று (24) காலை 10 மணியளவில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாபாரத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட இறைச்சி
அனுமதியின்றி ஒரு தொகை மாட்டிறைச்சியை முச்சக்கர வண்டியில் மருதங்கேணி புதுக்காட்டு வீதியூடாக செம்பியன்பற்று பகுதிக்கு கொண்டு செல்ல முயற்சித்த வேளை பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
நாளைய தினம் செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் நடைபெறவுள்ள நிலையில் வியாபார நோக்கில் இறைச்சியை கொண்டு சென்றமை பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதானவர் நாகர் கோவிலைச் சேர்ந்தவர் என தெரிவித்த பொலிஸார் , சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.