கற்பிட்டியில் பாரிய கடத்தல் முறியடிப்பு
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பெருந்தொகை மஞ்சள் மற்றும் முந்திரி பருப்பு ஆகியவற்றை பாரவூர்தி ஒன்றில் கடத்திச் சென்ற நபர் ஒருவரை கற்பிட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாச்சிகல்லி பகுதியில் நேற்று (14) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது பாரவூர்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 742 கிலோகிராம் மஞ்சள்,800 கிலோகிராம் முந்திரியம்பருப்பு ஆகியன மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட பொருட்களின் பெறுமதி பல இலட்சம் ரூபா இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பாரவூர்தியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.