மகா சிவராத்திரி; தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஊவா மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வங்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் டப்ளியூ. ரந்தெனிய கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
வடக்கு , கிழக்கு பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை
அக்கடிதத்தில், நாளை (26) இடம்பெறும் சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் பாடசாலை மாணவர்கள் மறுநாள் பாடசாலைக்கு செல்லும் போது பல்வேறு அசௌகரிங்களுக்கு முகங்கொடுப்பர்.
இதன்காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கைகளை கருத்திற் கொண்டு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த விடுமுறைக்கான பதில் பாடசாலையை எதிர்வரும் வாரத்தின் விடுமுறை நாளில் நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள் ஊவா மாகாண சபையின் பிரதான செயலாளர், ஊவா மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதேவேளை,மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.