உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான்; சுரேஷ் சலே வேண்டுமா?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த குண்டுதாரிகளுக்கு தேவாலயத்தை காட்ட சுரேஷ் சலே வேண்டுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர்களுடன் தொடர்பை பேணியே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியுள்ளமை அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவானது விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்காட்டியை காட்டியது இன்னார் தான் என இவர்கள் கூறக்கூடும்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஐந்து அமெரிக்கப் பிரஜைகள் கொல்லப்பட்டதால், அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அந்நாட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
இஸ்ரேல் தாக்குதலில் காலை இழந்து கோமாவுக்கு சென்ற ஈரானின் புதிய உச்ச தலைவர் ; முடிவுக்கு வரும் வளைகுடா போர்!
அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவானது (FBI), தாக்குதல் நடந்த இடங்களைப் பார்வையிட்டதுடன், தாக்குதல்காரர்களின் தொலைபேசிகள், டிஜிட்டல் சாதனங்கள், வீடியோ காட்சிகள் மற்றும் பயிற்சி தொடர்பான ஆவணங்களை மிக விரிவாக ஆராய்ந்து நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி ஒன்றை சமர்ப்பித்தது.
FBI அறிக்கையின்படி, சஹ்ரான் ஹாஷிம் என்பவரே இந்த கொடூரத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் தலைவராவார். இலங்கையில் 'ISIS-Sri Lanka' என்ற பெயரில் இந்த அமைப்பு இயங்கியதையும், அதற்கு சஹ்ரான் தலைமை தாங்கியதையும் அந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
சஹ்ரான் ஹாஷிம் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர்களுடன் நேரடித் தொடர்புகளைப் பேணியதுடன், அவர்களின் அனுமதியையும் பெற்றுள்ளார் என்பது விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர்களுடன் தொடர்பு கொண்டு,குண்டுகளைத் தயாரித்து தாக்குதலுக்குத் தயாரான இந்தக் குழுவிற்கு, தாக்குதல் நடத்த வேண்டிய தேவாலயத்தை சுரேஷ் சலே தான் காண்பித்தார் என்று இலங்கையில் சிலர் கூறுவது ஒரு நகைச்சுவையான விடயமாகும்.
இன்னும் சில நாட்களில் " உயிர்த்த ஞாயிறு எப்போது வரும் என்று தெரியாமல் நாட்காட்டியை (Calendar) காட்டியது இன்னார் தான்" என்று கூட இவர்கள் கூறக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
சுரேஷ் சலே தற்போது எதிர்நோக்கி வரும் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு நியாயம் கற்பிக்கும் வகையிலேயே இந்த உண்மைகளை முன்வைப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மேலும் தெரிவித்தார்.