மாதிவெலவில் உள்ள குடியிருப்பை விட்டு வெளியேறிய தோல்வியடைந்த 30 எம்.பிக்கள்!
இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெலவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, தோற்கடிக்கப்பட்ட மேலும் 80 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த குடியிருப்பில் இருந்து வெளியேறப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதிவெலவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் 110 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ளனர்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் நாள் வரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கியிருக்க நாடாளுமன்றத் தலைவர்கள் அனுமதியளித்திருந்தனர்.
இந்நிலையில், புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதிவெலவில் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் இருந்து வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.