ஈரான் மீது வான்வழித் தாக்குதல் ; 9 மருத்துவமனைகள் மீது தாக்குதல் குற்றச்சாட்டு
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானில் உள்ள 9 மருத்துவமனைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் நாடாளுமன்றத்தின் சுகாதாரக் குழு உறுப்பினர் பாத்திமா முகமது பெய்ஜியின் கூற்றுப்படி, தாக்குதலுக்குள்ளான ஒன்பது மருத்துவமனைகளில் ஐந்து மருத்துவமனைகள் தலைநகர் தெஹ்ரானிலும், ஏனைய நான்கு மருத்துவமனைகள் பிற நகரங்களிலும் அமைந்துள்ளன.

தெஹ்ரானில் உள்ள காந்தி மருத்துவமனை இந்த தாக்குதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்த நோயாளிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டு, மற்ற மருத்துவ நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.