யாழ்ப்பாண அரசியல் பரப்பில் முக்கிய ஆளுமையான எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், யாழ். வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று (14.11.2026) இரவு 11.50 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 3ஆம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சில வாரங்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற அவர், பின்னர் வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.