நடிகர் சூரி வீட்டு கல்யாணத்தில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் ; சமூக வலைத்தளங்களில் வைரல்
தமிழ் நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், நடிகர் சூரியின் குடும்பத் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரையில் நடைபெற்ற நடிகர் சூரியின் அண்ணன் மகனின் திருமண நிகழ்வில் நேரில் கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய், மணமக்களை வாழ்த்தியுள்ளார். இதன்போது நடிகர் சூரி, ஜேசன் சஞ்சய்க்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வைரல்
இந்தச் சந்திப்பு தொடர்பான காணொளி வெளியாகியதைத் தொடர்ந்து, ஜேசன் சஞ்சய்க்கும் நடிகர் சூரிக்கும் இடையிலான நட்புறவு 'சிக்மா' திரைப்படத்தின் போதே அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
'சிக்மா' திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழாவில், ஜேசன் சஞ்சய் கதையை விளக்கிய விதம், தனக்கு விஜய் அண்ணாவுடன் உரையாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சினிமா ரீதியாக ஏற்கனவே அறிமுகமாகியிருந்த இருவரும் தற்போது குடும்ப நிகழ்வொன்றில் சந்தித்துள்ளமை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. மதுரையில் நடைபெற்ற குறித்த திருமண நிகழ்வில் தயாரிப்பாளர் தமிழ்க்குமரன், நடிகர்கள் சஞ்சீவ், சசிகுமார் மற்றும் விமல் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.