மைனர் சிறுமியுடன் காதல்; மாணவியை கடத்திய 17 வயது காதலன்!
நமுனுகுல கனவெரெல்ல பகுதியைச் சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கடை உதவியாளரான 17 வயதான காதலன் இன்று (16) கைது செய்யப்பட்டதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளையில் உள்ள பட்டியகெதரவைச் சேர்ந்த சந்தேக நபர், நமுனுகுல கனவெரெல்ல தோட்டத்தில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தியதாகக் கூறப்படுகிறது.
தந்தை மிரட்டி துஷ்பிரயோகம்
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சந்தேக நபர் முன்பு மைனர் சிறுமியுடன் காதல் உறவில் இருந்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
தனது தந்தை தன்னை மிரட்டி துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி அவருக்குத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சந்தேக நபர் வேலைக்காக கொழும்பில் தங்கியிருந்த தனது தாயிடம் சென்றுள்ளார், அதன் பின்னர் சிறுமியின் தந்தை இந்த விவகாரம் குறித்து பொலிஸில் புகார் அளித்தார்.
சிறுமி, சந்தேக நபர் மற்றும் சந்தேக நபரின் தாய் ஆகியோர் பின்னர் தாமாக முன்வந்து பொலிஸில் முறைப்பாடு செய்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.