யாழில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து பரப்புரை
இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ ‘நமக்காக நாம்’ பிரசாரப் பயணத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்று யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையப் பகுதியில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினர் பரப்புரை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இந்த பரப்புரை நடவடிக்கையில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.