பலரையும் கவர்ந்த இலங்கைப் பெண் லாஸ்லியாவின் புகைப்படங்கள்; இணையத்தில் வைரல்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ஐனிமாவில் அறிமுகமான இலங்கையை நேர்ந்த லாஸ்லியாவின் ( Losliya Mariyanesan ) தற்போது, வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் ரசிகர்களுக்கு பிக் பாஸ் 3 நிகச்சியின் மூலமாக பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸை தொடர்ந்து, திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கிய லாஸ்லியா உடல் எடையையும் அதிகம் குறைத்துவிட்டார்.
அந்த வகையில் லாஸ்லியா நடிப்பில் சமீபத்தில் ஃபிரென்ட்ஷிப் திரைப்படம் வெளியானது. இதுதவிர பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என லாஸ்லியாவுக்கு அடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
குறிப்பாக இதில் பிக்பாஸ் புக யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ள ‘கூகுள் குட்டப்பன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ளார்.
மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தை சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கி வருகின்றனர்.
மேலும் இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் முதியவராக நடித்து வருகிறார். கூகுள் குட்டப்பாவை தொடர்ந்து ராட்சசன் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் கதாநாயகியாக லாஸ்லியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் லாஸ்லியா தற்போது, வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


