சித்திரைப் புத்தாண்டில் வருமானத்தை குவித்த இலங்கை போக்குவரத்து சபை!
சித்திரை புத்தாண்டின்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1500 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதன்படி ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்த வருமானம் கிடைத்துள்ளதாக இ.போ.ச தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார் .
130 மில்லியன் ரூபா வருமானம்
அதேவேளை ஒரு வாரத்தில் அதிவேக வீதியின் வருமானம் 130 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 12 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், புத்தாண்டு தினத்தில் நாடு முழுவதும் 1,200 பஸ்கள் இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதேவேளை புத்தாண்டு காலத்தில் மக்களின் பயணத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் தேவையான பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .