கொழும்பில் தொழிலதிபர் செய்த மோசமான செயல் ; அதிகாரிகள் அதிரடி
கொழும்பில் காணி விலை உச்சத்தில் இருக்கும் பகுதியான கொழும்பு 7ல் போலி ஆவணங்களை தயாரித்து மோசடியாக காணியை விற்பனை செய்த தொழிலதிபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு 7, பான்ஸ் பிளேஸ் பகுதியில் உள்ள பெருமதிப்புமிக்க காணித் துண்டொன்றை விற்பனை செய்த நுகேகொடையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரே நவம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தொடர் விசாரணைகள்
சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதிமன்ற நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றில் நடந்த விசாரணைகளின் பிரகாரம், குறித்த காணியை ஒரு பிரபல நிறுவனத்திற்கு மோசடியாக கையகப்படுத்துவதற்கு உதவி செய்து கொடுத்ததற்காக,பிரதான சந்தேகநபரிடமிருந்து 7 ஆடம்பர வாகனங்கள் மற்றும் ரூ. 56.5 மில்லியனைப் பெற்றதாக இந்தத் தொழிலதிபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பான்ஸ் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள சுமார் 79.71 பேர்ச்சஸ் பரப்பளவு கொண்ட காணியையே மோசடியாக விற்பனை செய்யப்பட்டதாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
போலி ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் அது தொடர்பான நிதிப் பரிமாற்றங்கள் குறித்து தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது. இதனையடுத்து, சந்தேகநபரை நவம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.