கொய்யா உற்பத்தியில் புதிய முயற்சி ; அசத்தும் றீச்சா!
தாயகத்தில் வடபகுதியில் உருவாகப்பட்டுள்ள ReeCha Organic Farm இலங்கையின் சுற்றுலா தளங்களுள் ஒன்றாக மக்களிடையே வெகு பிரபலமடைந்துள்ளது.
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் , அமைந்துள்ள ReeCha Organic Farm நாட்டுமக்களை மட்டுமல்லாது புலம்பெயர் தமிழ மக்களிடையேயும்பிரபலம். ஏனெனில் பலரையும் திரும்பி பார்க்கவைத்த ReeCha Organic Farm , நம் புலம் பெயர் தமிழ் தொழிலதிபரின் ஓர் சாதனை முயற்சி என்றுதான் சொல்லவேணடும்.
நல்ல உணவு, தங்குமிட வசதி, பொழுதுபோக்கு
இங்கு சுற்றுலா செல்பவர்களுக்கு கண்னுக்கு குளிச்சியாக பார்க்கும் இடமெங்கும் பச்சை பசேல உள்ளது. அதுமட்டுமல்லாது நல்ல உணவு, தங்குமிட வசதி, பொழுதுபோக்கு என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது ReeCha Organic Farm.
அதுமட்டுமல்லாது பயிர் செய்கை ,கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு என பல்வேறு துறைகளிலும் ReeCha Organic Farm சிறந்து விளங்குவதுடன், எமது தாயக மக்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கும் சிறந்த இடமாகவும் ReeCha Organic Farm உள்ளது.
இந்நிலையில் தற்போது பயந்தரு கொய்யா பயிர் செய்கையும் அங்கு பயிரிடப்பட்டுள்ளது. இது என்ன காடுகளுக்குள் வளகின்றது தானே என நினைப்பவர்களுக்கு , அது வருமானத்தையும் ஈட்டிதரும் என்பதும் வியக்க வைப்பதாய் அமைந்துள்ளது.
கோடைகாலத்தில் தாயகம் செல்லும் உறவுகள் உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக சென்றுவரக்கூடிய சிறந்த சுற்றுலா தளமாக ReeCha Organic Farm உள்ளமையை மறது விடாதீர்கள்.