சில மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல மாவட்டங்களுக்குப் புதிய மண்சர்வு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று (07) இரவு 7:00 மணி முதல் நாளை (08) இரவு 7:00 மணி வரையிலான 24 மணித்தியால காலப்பகுதிக்குச் செல்லுபடியாகும்.
நிலவும் மழைடனான வானிலை காரணமாகப் பல பிரதேசங்களுக்கு இரண்டு மட்டங்களிலான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

மட்டம் 2 - அவதானமாக இருங்கள் (செம்மஞ்சல்/Amber)
பதுளை மாவட்டம்: பசறை பிரதேசம் கேகாலை மாவட்டம்: மாவத்தகம மற்றும் ருவன்வெல்ல பிரதேசங்கள்
மட்டம் 1 - விழிப்புடன் இருங்கள் (மஞ்சள்/Yellow)
களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட
கண்டி மாவட்டம்: உடுதும்பரை
கேகாலை மாவட்டம்: தெஹியோவிட்ட மற்றும் கேகாலை
இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, எஹெலியகொடை, அயகம, வெலிகேபொல மற்றும் குருவிட்ட குறிப்பிட்ட பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் அவசர மண்சரவு நிலைமைகள் அல்லது மண்மேடுகள் சரிந்து விழுவது தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.