நீதிமன்றத்தில் ஷிரந்தி ராஜபக்ஷ; இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறை!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, இன்று (07) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகளால் ஷிராந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.

அரச வங்கி ஒன்றில் 100 இலட்சம் ரூபாய் நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்
முதலாம் இணைப்பு
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (07) முற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அந்த ஆணைக்குழுவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதேவேளை இலங்கை வரலாற்றில் முன்னாள் முதல் பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை ஆகும்.
இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ அவரது வீட்டில் வைத்து கைதான நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் அவருடன் சென்றமை குறிப்பிடத்தக்கது.