கருணாவை திடீரென அழைத்த CID; கிடுக்கிப்பிடி போடும் அனுர அரசாங்கம்
விநாயகம்மூர்த்தி முரளிதரன் CID திடீரென விசாரணைக்கு அழைத்ததாக கூறப்படுகின்றது.
கடத்தல் சம்பவம் தொடர்பில் சிறையில் உள்ள பிள்ளையானும் கருணாவும் நெருங்கிய நண்பர்கள் . அத்துடன் ராஜபக்ச குடும்பத்துடன் இருவரும் நெருங்கிய தொடர்பினை பேணியவர்கள்.
'கருணா , கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணை ஒன்றில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானார்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே கருணா அம்மன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கு விசாரணை அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலம் பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்திலிருந்து வெளியேறியதாக பொலிஸார் கூறினர்.