வீதியில் கத்தி சென்றவரால் அரங்கேற்றப்பட்ட சம்பவம் ; பறிபோன உயிர்
மீகொட, ஓவிட்டிகம பகுதியில் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், கூரிய ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக மீகொடப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓவிட்டிகம, மீகொடப் பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

தகராறு
உயிரிழந்தவர் சிறிய அளவிலான வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வந்தவராவார்.
முன் பகை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, சந்தேகநபர் குறித்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாகப் பலமுறை சத்தமிட்டுக் கத்திச் சென்றதுடன், அந்தச் சமயத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்தத் தாக்குதலில் முடிந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை உடனடியாகக் கைது செய்வதற்காகப் பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன.