கிளிநொச்சியில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கிளிநொச்சியில் பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்நிலையில் 2 நாட்களாக தமது வாழ்வாதாரம் இழந்த நிலையில் இருப்பதாக முச்சக்கரவண்டி சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சாரதிகள் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் விற்பனை நிலையங்களில் அதிக விலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்து முச்சக்கரவண்டியினை வாடகைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அப்படி செலுத்தப்படும் ஆயில் முன்னைய விட அதிகமான வாடகை பணம் அறவிடவேண்டிய நிலைக்கு முச்சக்கரவண்டியின் சாரதிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே முற்சக்கரவண்டியில் தற்பொழுது மக்கள் முச்சக்கரவண்டியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் முச்சக்கரவண்டி சாரதிகள் தமது வாழ்வாதாரத்தினை இழந்த நிலையிலுள்ளதுடன், இவ்வாறான நிலை தொடருமாயின் தமது முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலை விட்டு வேறு ஏதும் தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என சாரதிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரிபொருளை மீண்டும் விரைவாகப் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.