இ.போ.ச பேருந்து கட்டணங்களை செலுத்துவது தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச) பேருந்து கட்டணங்களை செலுத்துவதற்கு இனிவரும் காலங்களில் அட்டைகளை (Cards) மட்டுமே பயன்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில மாதங்களுக்குள் இந்த நடைமுறை இ.போ.ச சேவையில் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இன்று (16) மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் பயணிகளின் போக்குவரத்து வசதிகள் குறித்து ஆராய்ந்த பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.
இ.போ.ச டிஜிட்டல் மயமாக்கப்படுவது உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவையின் மாற்றங்களை எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் மக்கள் காண முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.