கெஹல்பத்ர பத்மே விவகாரத்தில் புதிய திருப்பம் ; பிரபல நடிகையிடம் வாக்குமூலம்
ஒரு பிரபல நடிகை, கெஹல்பத்ர பத்மேவை ஒரு திரைப்படத்தில் நடிக்க அழைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அடையாளம் காணப்பட்ட ஒரு பிரபல நடிகை, கெஹல்பத்தர பத்மேவை ஒரு திரைப்படத் தயாரிப்பில் இணைய அழைத்ததாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, சம்பந்தப்பட்ட நடிகையிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஒரு பொலிஸ் அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக கெஹல்பத்தர பத்மேவிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஒரு உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக கெஹல்பத்தர பத்மேவிற்கு பாரிய துப்பாக்கி கடத்தலில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
மேலும், கெஹல்பத்தர பத்மேவிற்கு 5 நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் இணைந்து பல குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், பிரபல நடிகைகள் மூலம் அவரது கருப்பு பணம் மறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் கூறியிருந்தனர்.
எனவே, குறித்த நடிகைகள் பல்வேறு முதலீடுகளுக்கு அந்த பணத்தைப் பயன்படுத்தினார்களா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இது தொடர்பில் தீவிர விசாரணைகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கிடையில், ஒரு பிரபல நடிகை, கெஹல்பத்ர பத்மேவை ஒரு திரைப்படத்தில் நடிக்க அழைத்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.