யாழில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய வானில் வாள்!
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்றதாக கூறி இன்று (10) அதிகாலை அல்லைப்பட்டி பகுதியில் வைத்து, ஹையேஸ் வாகனம் ஒன்றின் மீது ஊர்காவற்துறை பொலிஸார் துப்பாகி சூடு நடத்தி இருந்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

24ஆம் திகதி வரை விளக்கமறியலில்
இந்த சம்பவத்தின் போது மேலும் இரண்டு இளைஞர்கள் குறித்த வாகனத்தில் இருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அதேவேளை பொலிஸார் வேண்டுமென்றே துப்பாகிசூட்டை நடத்தியதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.