மருத்துவமனையின் அலட்சியம் ; பிறந்து ஒரு மணி நேரமே ஆன குழந்தை பலி
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தனியார் வைத்தியசாலையில் பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, கான்பூரில் உள்ள பக்கர்கஞ்சில் வசிக்கும் அருண் நிஷாத் மற்றும் அவரது மனைவி பிட்டு ஆகியோருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

மின் கசிவு ஏற்பட்டு தீ
பிறந்த குழந்தையின் உடல் வெப்பநிலையைச் சரியாகப் பராமரிக்க உதவும் கருவியில் குழந்தை வைக்கப்பட்டது. இதன்போது மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததில், அதிலிருந்த குழந்தை தீ காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறது.
இந்த சம்பவத்தைப் பல மணி நேரம் கழித்தே பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளது வைத்தியசாலை நிர்வாகம். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் வைத்தியசாலைக்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவத்தை குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து பொலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.