நாவூறவைக்கும் யாழ்ப்பாணத்து பனங்காய் பணியாரம்! (Video)
ஈழத்தமிழகளின் உணவுகள் உலகப் பிரபலம். அதிலும் யாழ்ப்பாணத்து உணவுகள் இலங்கையில் மட்டுமல்லாது புலம் பெயர் மக்கள் மத்தியிலும் வெகு பிரபலம். காரணம் அதன் நாவூறும் சுவை மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள்.
யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ், ஒடியல் புட்டு, பனங்காய் பணியாரம் என்பன மிகவும் ஆரோக்கியமான உணவுகளுள் அடங்கும். போர்கால சூழலால் எமது மக்களில் அரைவாசிக்குமேல் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வசித்து வருகின்றனர்.
அங்கு பிறந்த எமது அடுத்த சந்ததியினர் மேலத்தேய உணவுகளுக்கு பழக்கமாகி விட்டனர்.
இந்நிலையில் எமது பாரம்பரிய ஆரோக்கிய உணவுகளை எமது அடுத்த சந்ததிகளுக்கு தெரியபடுத்த வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. இக்காணொளியில் பனம் பழத்தில் இருந்து பனங்காய் பணியாரம் எப்படு சுடுவது என்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.