முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - ஹமாஸ் போர் ; பிணைக்கைதிகள் விடுவிப்பு; மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான இரண்டு ஆண்டு போர் முடிவுக்கு வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் பிடியில் இருந்த அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளும் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மொத்தம் இரண்டு கட்டங்களாக பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இரண்டாம் கட்டத்தில் 13 பிணைக்கைதிகள் தெற்கு காசாவின் கான் யூனிஸில் வைத்து மாற்றப்பட்டனர்.
மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம்
விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை மையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு பின் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க உள்ளனர். இந்த விடுதலை செய்தியைக் கேட்டு, இஸ்ரேல் முழுவதும் பெரிய திரைகளில் பார்த்த மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரேலின் பிடியில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளின் விடுதலைக்காக பாலஸ்தீனியர்கள் காத்திருக்கின்றனர்.
இதில், ஆயுள் தண்டனை பெற்ற 250 பேர் உட்பட பலரும் அடங்குவர். இவர்கள் மேற்கு கரை அல்லது காசாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.
இந்த விடுதலையின் மூலம், 2023 அக்டோபர் தாக்குதலில் ஆரம்பித்து, காசாவை இடிபாடுகளுக்குள் தள்ளிய போரின் ஒரு முக்கிய அத்தியாயம் இஸ்ரேலுக்கு முடிவுக்கு வருகிறமை உலக மக்களுக்கு பெரும் அம்கிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.