தமிழர் பகுதியொன்றுக்கு அவசரமாக அழைத்து செல்லப்பட்ட இஷாரா செவ்வந்தி
குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இன்று (19) பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் அவர் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணை
கணேமுல்லை சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பின்னர் இஷாரா செவ்வந்தி நாட்டில் ஒளிந்திருந்த இடங்களைத் தேடி விசாரணை செய்யும் நோக்கிலேயே அவர் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டினுள் தலைமறைவாக இருந்த காலப்பகுதியில் கிளிநொச்சி பிரதேசத்தில் சில நாட்கள் தான் மறைந்திருந்ததாக இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் தெரிவித்த தகவலின் பிரகாரம் அவர் அங்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர் மீண்டும் கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.