நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் கைது
சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. .
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (பிப்ரவரி 11) 10ஆவது நாளாக போராட்டம் நடைபெற்றது.

என்னையும் கைது செய்யுங்கள்
அரசுத் துறைகளில் உள்ள மற்ற பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். முறையான விடுப்பு வசதிகள், மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும்.
மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்களாக அங்கீகரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்களை காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்தியவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார்.
அப்போது ஊரக உள்ளாட்சி பணியாளர்களை பொலிஸார் கைது செய்து வேனில் ஏற்றினர். அவர்களுடன் என்னையும் கைது செய்யுங்கள் என்றவாறு சீமானும் வேனில் ஏறினார். அவரையும் பொலிஸார் கைது செய்த பின்னர் சீமான் விடுவிக்கப்பட்டார்.