தமிழர் பகுதி பாடசாலை ஒன்றின் புனரமைப்பில் முறைகேடு; பெரும் கவலையில் பெற்றோர்கள்
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலய வளாகத்தில் அமைக்கப்படவுள்ள வீதியானது புனரமைக்கப்பட்டு குறுகிய காலத்துக்குள்ளேயே, அவ்வீதி மிக மோசமாக சேதமடைந்துள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்னர்.
குறித்த வீதியானது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்பட்டபோதும் குறித்த பணியினை மேற்கொண்ட ஒப்பந்தகாரர் பணியினை முறையாக மேற்கொள்ளவில்லை என்றும் இதன் காரணமாகவே வீதி குறுகிய காலத்தில் சேதமுற்றுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் புனரமைக்கப்பட்ட வீதியே இதுவென தெரிவிக்கும் அவர்கள், குறித்த வீதியினை மேற்பார்வை செய்து, உரிய முறைப்படி வீதி புனரமைக்கப்பட்டுள்ளது என சிபாரிசு செய்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.