தமிழர் பகுதியில் பக்கத்து வீட்டுக்காரரால் நடத்தப்பட்ட கொடூரம் ; தீவிரமடையும் விசாரணை
புத்தளம், மாரவில பகுதியில் டங்கன்னாவையைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவர் வாக்குவாதத்தின் போது கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் மாரவில பகுதியில் நேற்று (22) பிற்பகல், நடைபெற்றுள்ளது.

சம்பவத்தின் போது படுகாயமடைந்தவர் மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக வந்த தகவலைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.
பாதிக்கப்பட்டவருக்கும் அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு அதிகரித்ததால், அண்டை வீட்டார் இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பாக 43 வயது சந்தேக நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன் மாரவில பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.