இலங்கையில் முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டி அறிமுகம்!
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பல மின்னியல் பொருட்கள் உருவாக்கப்படுகிற நிலையில் இலங்கையில் புதிதாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி டேவிட் பீர்ஸ் கம்பனியால் மின்சார முச்சக்கர வண்டிகள் ( மாற்றியமைக்கப்பட்ட) சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. USAIDஇன் அனுசரனையுடன் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று காலை அமெரிக்க தூதுவரின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இந்நிலையில் விரைவில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கரவண்டிகள் சந்தையில் கிடைக்கப்பெறும் என கூறப்படுகின்றது.
இந்த நிகழ்வில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ,
Launch event of the Electric 3 Wheelers converted by David Peris Motor Company was held this morning & the MOU signing with USAID in the presence of HE Ambassador @USAmbSL. Was great to see much needed energy sector transformations taking place & plans for the future. pic.twitter.com/66uD4ny0qn
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 16, 2022
எரிசக்தி துறையில் மிகவும் தேவையான மாற்றங்கள் இடம்பெறுவதையும் எதிர்காலத்திற்கான திட்டங்களையும் பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதுவர் ஜூலி சங் குறிப்பிடுகையில்,
Pleased to join Minister @kanchana_wij to announce the collaboration between @USAIDSriLanka & @davidpieris to electrify three-wheelers. Private-public partnerships like this generate innovation & renewable energy solutions to address SL’s energy challenges.https://t.co/KGT4ifPPch pic.twitter.com/bu8BPu0oJN
— Ambassador Julie Chung (@USAmbSL) August 16, 2022
இலங்கை இது போன்ற முச்சக்கர வண்டிகளுக்கான மின்சார மயமாக்கல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.
அத்துடன், இலங்கையின் எரிபொருள் சவால்களை எதிர்கொள்ள தனியார் மற்றும் அரசாங்க கூட்டிணைவு மூலம் இது போன்ற புதுப்பிக்கத்தக்க தீர்வுகள் உருவாக்குகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.